பிரசித்தி பெற்ற அமர்நாத் யாத்திரை குறித்த அறிவிப்பு!

பிரசித்தி பெற்ற அமர்நாத் யாத்திரை குறித்த அறிவிப்பு!

தெற்கு காஷ்மீரின்  இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கான புனித யாத்திரை இந்தாண்டு ஜூலை 21-ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

பிரசித்தி பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரை செல்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில்  இந்தாண்டு அமார்நாத் யாத்திரை தாமதமாகியுள்ளதோடு  யாத்திரைக்கான கால அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

இவ் வருடத்திற்கான அமர்நாத் யாத்திரை ஜுலை மாதம் 21 திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதிவரை அனுமதிக்கப்பட்டுள்ளது.  சாதுக்களைத் தவிர  55 வயதுக்குக் குறைவான அனைத்து யாத்ரீகளும் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும்  அமர்நாத் கோயிலுக்கு வரும் யாத்ரீகள் அனைவருக்கும் எல்லையிலேயே  கொரோனா  பரிசோதனை செய்யப்படும் எனவும், வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே குகைக் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.