மகாராஷ்டிராவில் நடந்த குண்டுவெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்ட நாள்: 8-9-2006

மகாராஷ்டிராவில் நடந்த குண்டுவெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்ட நாள்: 8-9-2006

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மலேகான் நகரில் கடந்த 2006-ம் ஆண்டு இதே நாளில் மசூதி மற்றும் சந்தைப் பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

 

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மலேகான் நகரில் கடந்த 2006-ம் ஆண்டு இதே நாளில் மசூதி மற்றும் சந்தைப் பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்

 


• 1923 - கலிபோர்னியாவில் 7 அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் மூழ்கின.

• 1934 - நியூஜெர்சி கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 135 பேர் கொல்லப்பட்டனர்.

• 1959 - ஆசியத் தொழில்நுட்பக் கழகம் பாங்காக் நகரில் நிறுவப்பட்டது.

• 2006 - ஆப்கானிஸ்தான், காபூலில் அமெரிக்கத் தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

• 2008 - வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் காலமானார்