தென் ஆப்பிரிக்க பிரதமர் ஹெண்ட்ரிக் வேர்வேர்ட் நாடாளுமன்றத்தில் படுகொலை (செப்.6, 1966)

தென் ஆப்பிரிக்க பிரதமர் ஹெண்ட்ரிக் வேர்வேர்ட் நாடாளுமன்றத்தில் படுகொலை (செப்.6, 1966)

நெதர்லாந்தில் பிறந்த ஹெண்ட்ரிக் வேர்வேர்ட் என்ற எச்.எப்.வேர்வேர்ட், தென் ஆப்பிரிக்க பிரதமராக 1958-ம் ஆண்டு பொறுப்பேற்றார். முன்னதாக அவர் மந்திரியாக இருந்தபோது, நிறவெறிக் கொள்கை அமல்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றினார். இதனால் பல தலைவர்களின் வெறுப்பை அவர் சம்பாதித்தார். இந்நிலையில், ஆப்பிரிக்க மக்களுக்கு சுதந்திர குடியரசை உருவாக்க வேண்டும்

நெதர்லாந்தில் பிறந்த ஹெண்ட்ரிக் வேர்வேர்ட் என்ற எச்.எப்.வேர்வேர்ட், தென் ஆப்பிரிக்க பிரதமராக 1958-ம் ஆண்டு பொறுப்பேற்றார். முன்னதாக அவர் மந்திரியாக இருந்தபோது, நிறவெறிக் கொள்கை அமல்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றினார். இதனால் பல தலைவர்களின் வெறுப்பை அவர் சம்பாதித்தார்.

இந்நிலையில், ஆப்பிரிக்க மக்களுக்கு சுதந்திர குடியரசை உருவாக்க வேண்டும் என்ற ஆப்ரிக்கானரின் கனவு நிறைவேறி, 1961-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க குடியரசு அமைந்தபோதும் வேர்வேர்ட் பிரதமராக இருந்தார். அப்போது நிறவெறி எதிர்ப்பு இயக்கங்களுக்கு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 


இந்நிலையில், 1960-ம் ஆண்டு நடந்த கொலை முயற்சியில் வேர்வேர்ட் உயிர் தப்பினார். 1966ல் அவரது தேசிய கட்சி வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆனார். அதபின்னர், அதே ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி கேப்டவுனில் உள்ள பாராளுமன்றத்திற்கு வந்தார். அப்போது துணை ராணுவப் படையைச் சேர்ந்த ஒருவர் திடீரென, வேர்வேர்டின் கழுத்து மற்றும் மார்பில் 4 முறை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.

இதேநாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1776 - கரிபியன் தீவான குவாதலூப்பேயை சூறாவளி தாக்கியதில் 6000 பேர் பலி

1522 - பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.

1873 - இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார்.

1965 - இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியா பாகிஸ்தானைத் தாக்கி, லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.

1970 - ஐரோப்பாவில் இருந்து நியூயோர்க் சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் விமானங்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஜோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1990 - யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

1997 - வேல்ஸ் இளவரசி டயானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர்.