விஷால், ஆர்யாவின் 'எனிமி' ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

விஷால், ஆர்யாவின் 'எனிமி' ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த ‘எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், அனேகமாக இந்த படம் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘எனிமி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது

விஷால் ஜோடியாக மிருணாளினி, ஆர்யா ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில் ரேமண்ட் டெர்ரிக் கிராஸ்டா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.