ஆசிரியர், அதிபர், ஆசிரியர் ஆலோசகர் சேவைகளை அகப்படுத்தப்பட்ட சேவையாக அறிவிக்க அமைச்சரவை அனுமதி

ஆசிரியர், அதிபர், ஆசிரியர் ஆலோசகர் சேவைகளை அகப்படுத்தப்பட்ட சேவையாக அறிவிக்க அமைச்சரவை அனுமதி

ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் அதிபர் சேவை ஆகியவற்றை அகப்படுத்தப்பட்ட சேவையாக (Closed Service) வர்த்தமானியில் அறிவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அதனை வர்த்தமானியில் அறிவிக்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

அதிபர்-ஆசிரியர் சேவைகளில் காணப்படும் வேதன முரண்பாடுகளை நீக்குதல் தொடர்பாக ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.