அனுமதியின்றி இயங்கிய களஞ்சியசாலை முற்றுகை: 4, 096 டன் சீனி மீட்கப்பட்டது (படங்கள்)

அனுமதியின்றி இயங்கிய களஞ்சியசாலை முற்றுகை: 4, 096 டன் சீனி மீட்கப்பட்டது (படங்கள்)

வத்தளை - கெரவலப்பிட்டிய பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த  4,096 மென்றிக் டன் சீனி மீட்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் இன்று (30) முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, இவை மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த களஞ்சியசாலை நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி முன்னெடுத்து சென்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தைகளில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் சீனி இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் சீனியை பதுக்குவதாக வர்த்தக அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்கமைய நுகர்வோர் அதிகார சபையினால் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

No description available.No description available.No description available.No description available.