ரிஷாட்டின் மனைவி, மாமனாரின் பிணைக் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு
சிறுமி ஹிஷாலினி தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோரின் பிணை கோரிக்கை மீண்டும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில், சந்தேகநபர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கைகளும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று (30) குறித்த வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில், நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோருக்கு பிணை வழங்குமாறு, சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், கொழும்பு மேலதிக நீதிவான் சஜிந்தா ஜயசூரியவிடம் கோரியிருந்தனர்.
எனினும், கோரிக்கையை ஆராய்ந்த மேலதிக நீதிவான் பிணை கோரல் மனுவை மீண்டும் நிராகரித்து, எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம்திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.