லிந்துலையில் 3 நாட்களில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு
லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடந்த மூன்று தினங்களுக்குள் 121 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் அபேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
225 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளிலேயே 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் டயகம போப்பத்தலாவ, ஹோல்புறூக், மெராயா, இராணிவத்தை உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அனைவரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)