வீட்டினுள் சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் குறித்த அறிவிப்பு

வீட்டினுள் சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் குறித்த அறிவிப்பு

கொவிட் தொற்றுக்குள்ளான நபர்களுக்கு வீட்டினுள் சிகிச்சை அளிக்கும் முறை சாதகமான பெறுபேற்றை தந்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றாளர்கள் குணமடைய நல்ல மன ஆரோக்கியத்தை பராமரிப்பது ஒரு முக்கிய காரணியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வீட்டினுள் சிகிச்சை அளிக்கும் முறையின் கீழ் 24,847 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டார்.

´நாடு பூராகவும் 41,826 பேர் வீட்டினுள் சிகிச்சை அளிக்கும் முறையின் கீழ் உள்ளனர். 474 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டினுள் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் மன ஆரோக்கியத்தை பராமரிப்பது பிரதானமானது என அவர்களின் பதில்களின் இருந்து தெரிகிறது. அவர்களிடம் தொலைப்பேசியில் உரையாடும் போது இது எமக்கு தெரிய வந்தது. இந்த நோய் தீவிரமடைய மன அழுத்தம் முக்கிய காரணியாகும்´.