இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை | Thunderstorms Likely Night Warning Issued Public

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.