இலங்கையில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பு!

இலங்கையில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பு!

இலங்கையில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் இம்மாதம் 15 அல்லது 22 ஆம் திகதிகளில் குரங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக என்று தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி (03) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பு! | First Ever Monkey Census In Sri Lankaஅதேவேளை கடந்த ஆண்டு குரங்களினால் இலட்சக்கணக்கான தேங்காய்கள் அழித்து நாசமாக்கப்பட்டமையினால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், அவரசரமாக கணக்கெடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் உட்பட பல அரசாங்க நிறுவனங்கள் கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.

மேலும் இந்த கணக்கெடுப்பில் துல்லியமான தரவுகளை சேகரிப்பதனால் குரங்குகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும், தென்னைப் பயிர்ச்செய்கைக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கும் வாய்ப்பாக அமையும் எனவும் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் தெரிவித்தார்.