COVAX திட்டத்தின் கீழ் மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசிகள்

COVAX திட்டத்தின் கீழ் மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசிகள்

கொவெக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ் மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசிகள் நேற்று (28) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்சினால் சுகாதார அமைச்சரிடம் இவை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில், இவை, கொவெக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ் அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த வருட இறுதிக்குள் நாட்டு மக்களுக்கு 2 தடுப்பூசிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆகஸ்ட் 26 ஆம் திகதி அன்று சனத்தொகையின் 25 வீதமானோருக்கு இரு தடுப்பூசிகளையும் வழங்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)