இன்றும் 4000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தொற்று!
கொரோனா தொற்று உறுதியான மேலும் 818 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 3,764 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியிருந்தது.
அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,582 ஆக உயர்வடைந்துள்ளது
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 421,557 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,203 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 355,394 ஆக அதிகரித்துள்ளது.