மக்களை அவதானமாக செயற்படுமாறு வேண்டுகோள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா வேரியன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது தொற்றும் வீதம் அதிகமாகவும் மரண வீதம் அதிகமாக ஏற்படுத்தக் கூடியது எனவும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
இன்று (28) மாலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 274 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 10 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் 1982 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 36 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.