பெண்ணின் படத்தை நிர்வாணமாக திாிபுபடுத்தி கப்பம்பெற முயன்ற இரு இளைஞர்கள் கைது

பெண்ணின் படத்தை நிர்வாணமாக திாிபுபடுத்தி கப்பம்பெற முயன்ற இரு இளைஞர்கள் கைது

பெண் ஒருவரின் நிர்வாணப்படத்தை காட்டி அச்சுறுத்தி, கப்பம்கோர முயன்ற சம்பவம் தொடர்பில் இருவர் எம்பிலிப்பிட்டிய கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் மூலம் பெண்ணெருவரின் புகைப்படத்தை பெற்று, அதனை நிர்வாணப் படமாக திரிபாக்கி, பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் அனுப்பி இருவர் கப்பம் கோரியமை தொடர்பில் கடந்த 25 ஆம்திகதி எம்பிலிப்பிட்டிய காவல்நிலையத்துக்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, நேற்று சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், அவர்களிடமிருந்து இரண்டு கணினிகளும், 2 கைப்பேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மற்றும் அங்கொடை ஆகிய பிரதேசங்களை 20, 23 வயதுகளையுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரகசிய கணினி செயலியொன்றின் மூலம் சந்தேகநபர்கள் குறித்த புகைப்படத்தை திரிபுப்படுத்தி, போலி பேஸ்புக் கணக்கின் ஊடாக இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை இன்று நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள எம்பிலிப்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.