தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 626 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 626 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி , தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59,621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வௌியேறும் 13 இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வீதித் தடையில் நேற்றைய தினம் 609 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.