ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம்
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சரவையின் ஆறு உப குழுக்களும் அமைச்சரவையும் சுமார் ஒரு மணித்தியாலம் இது குறித்து கலந்துரையாடியதாக குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் பல்வேறு கட்சிகளுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் இருந்த போதிலும், ஒருபோதும் பிளவு ஏற்படாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சம்பவங்களை கருத்தில் கொண்டு பல்வேறு அரசியல் குழுக்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றன.
கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தாலும் அவ்வாறான செயற்பாட்டிற்கு இடமளிக்க போவதில்லை என ஊடக அமைச்சர் வலியுறுத்தினார்.
கலந்துரையாடல் மூலம் சிக்கல்களை தீர்த்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
ஊனமுற்றவர்களுக்காக ஊடக அமைச்சின் அடிப்படையாகக் கொண்டு ஒரு அலுவலகம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர்களின் அவர்களில் ஒரு பிரதிநிதி சேவைக்காக அமர்த்தப்படுவார். ஊடகவியலாளர் காப்புறுதி தொடர்பாகவும் இன்று கலந்துரையாடப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கொவிட் நோயாளர்களுக்கு தேவையான 3 லட்சம் லீட்டர் திரவ ஒட்சிசனை வாராந்தம் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. போதுமான ஒட்சிசன் தொகையை நாட்டில் களஞ்சியப்படுத்தி வைப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். நாளாந்த ஒட்சிசன் பயன்பாடு அதிகரித்திருப்பதை தொடர்ந்து, ஒட்சிசனை உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரங்களை இறக்குமதி செய்வது குறித்து சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். அவசர நிலைமையை கருத்தில் கொண்டு ஏற்கனவே இவ்வாறான 14 இயந்திரங்களுக்கு கண்டறியப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை நாட்டு மக்களில் ஒரு கோடி 79 லட்சத்து 36 ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி ஆறு பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)