6 இலங்கை மீனவர்களை மீட்டெடுத்த இந்திய கடலோர பாதுகாப்பு படை
இந்து சமுத்திரத்தின் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகில் நடுக்கடலில் சிக்கித் தவித்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவற்படை மீட்டுள்ளது.
இலங்கை மீன்பிடிக் கப்பல் இந்திய தீவுகளில் இருந்து சுமார் 190 கடல் மைல் தொலைவில் மிதந்து வந்ததாக இந்திய கடலோர காவல்படை மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை மீனவர்கள் அனைவரும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும், படகுகளுடன் மீட்கப்பட்ட மீனவர்களை பிளேயார் துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் குறித்த நபர்கள் மீட்கப்பட்ட போது கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து சுகாதார வழிமுறைகளுடம் பின்பற்றப்பட்டதாக இந்திய கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.