5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் அடித்து கொலை!

5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் அடித்து கொலை!

பாணந்துறை- மொரன்துட்டுவ பகுதியில் 5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் சிறுமியின் உறவினர்களாளேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 45 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறுமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு வருகை தந்த  சந்தேகநபர்,  அந்த சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.

குறித்த சம்பவத்தை அறிந்த  சிறுமியின் தந்தை மற்றும்  மாமன்மார் சந்தேகநபரை கொட்டனால் அடித்து கொன்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.