விபத்தில் ஒருவர் பலி - மற்றொருவர் படுகாயம்

விபத்தில் ஒருவர் பலி - மற்றொருவர் படுகாயம்

கிளிநொச்சி ஏ - 09 நெடுஞ்சாலையில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தென்னிலங்கையில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த டொல்பின் ரக வான் ஒன்றும் நேர் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே விபத்து நிகழ்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் வானின் சாரதியின் தூக்கக் கலக்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

வானின் சாரதி கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.