ஸ்ரீலங்காவில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம்! அனில் ஜாசிங்க

ஸ்ரீலங்காவில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம்! அனில் ஜாசிங்க

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பரவும் கொரோனாவால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஏனைய பல பகுதிகளில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

காலி, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், ராஜகிரிய போன்ற பகுதிகளிலும் தற்போது சுயதனிமைப்படுத்தலில் பலர் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.