பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த நபரின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு
மொரட்டுவை - லுணாவ பகுதியில் காவல்துறையினரின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியமையை அடுத்து நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரியோகத்தில் உயிரிழந்தவரின் உடல் அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் நீதவான் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனையின் பின்னர் அவரது உடல் கையளிக்கப்பட்டுள்ளது.
லுணாவை பாலத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இரவு 12.25 அளவில் சேவையில் ஈடுபட்டிருந்த அங்குலானை காவல்துறையினர் இரண்டு முச்சக்கரவண்டி நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் காவல்துறையினரின் சேவைக்கு இடையூறு ஏற்படத்தியுள்ளதோடு காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் மீது காவற்துறையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்கள் நாளை காலை மொரட்டுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.