நாடு திரும்பிய 13 பேர் உட்பட 3,806 பேருக்கு நேற்று தொற்று உறுதி

நாடு திரும்பிய 13 பேர் உட்பட 3,806 பேருக்கு நேற்று தொற்று உறுதி

நாட்டில் நேற்றைய நாளில் 3, 806 கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில், 3,793 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 13 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 373, 165 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 2,186 பேர் நேற்று குணமடைந்தனர்.

இதன்படி,  தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 318, 714 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 47, 661 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று 51 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அப்பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் மெதவெலகம பகுதியை சேர்ந்த 6 பேரும் அடங்குவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.