மட்டக்களப்பில் டெல்டா கொரோனா வைரஸ் திரிபுடைய நோயாளர்கள் இருக்கக்கூடும்!
கொவிட் தொற்றுறுதியாவோர் மற்றும் மரண எண்ணிக்கையினை நோக்குகையில் டெல்டா கொரோனா வைரஸ் திரிபுடைய நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
டெல்டா கொரோனா வைரஸ் திரிபுடைய நோயாளர்கள் எவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 303 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தொற்றுறுதியாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால,; டெல்டா வைரஸ் திரிபு குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டுள்ளார்.