பசறையில் மேலும் 34 பேருக்கு கொவிட்!

பசறையில் மேலும் 34 பேருக்கு கொவிட்!

பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 34 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

பசறை மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜெயக்குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹதோவ தொழிற்சாலை பிரிவில் நேற்றைய தினம் 106 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 25 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அத்துடன் பசறை பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட எண்டிஜன் பரிசோதனைகளில் 9 நோயாளர்களும் கண்டறியப்பட்டதாக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.