தம்புள்ளை நகரின் சகல வர்த்தக நிலையங்களுக்கும் நாளை மறுதினம் முதல் பூட்டு

தம்புள்ளை நகரின் சகல வர்த்தக நிலையங்களுக்கும் நாளை மறுதினம் முதல் பூட்டு

தம்புள்ளை நகரின் சகல வர்த்தக நிலையங்களையும் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, வர்த்தக உரிமையாளர் சங்கங்கள் இணைந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன.

எவ்வாறாயினும், தம்புள்ளை நகரில் இயங்கும் பொருளாதார மத்திய நிலையத்தை மூடுவதற்கு இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் யூ.பீ ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.