கர்ப்பிணித் பெண்களுக்காக தனிப்பட்ட தடுப்பூசி செலுத்தல் மையங்களை அமைக்குமாறு வலியுறுத்தல்

கர்ப்பிணித் பெண்களுக்காக தனிப்பட்ட தடுப்பூசி செலுத்தல் மையங்களை அமைக்குமாறு வலியுறுத்தல்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக தனிப்பட்ட தடுப்பூசி செலுத்தல் மையங்களை ஆரம்பிக்க வேண்டும் என குடும்பநல சுகாதார சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களுக்கு கர்ப்பிணித் தாய்மார்கள் செல்வதனால், அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்று அந்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தல் மையங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மத்தியில், டெல்டா திரிபு தொற்றுறடையவர்கள் இருக்கக்கூடும்.

எனவே, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவதற்காக வாரத்திற்கு ஒரு முறையேனும் அல்லது சில மணித்தியாலங்கள் ஒதுக்கியேனும், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ அல்லது பிரதேச வைத்தியசாலையிலோ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.