பேருந்து சாரதிகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை

பேருந்து சாரதிகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை

கம்பஹாவில் பேருந்து சாரதிகளுக்கு COVID-19 க்கான பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியை கம்பஹா பொலிசார் நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.

தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் ஓட்டுநர்கள் இதன்போது பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மார்ச் 11 ஆம் திகதி நாட்டில் இந்த நோய் பரவத் தொடங்கியதில் இருந்து இன்றுவரை 2464 கொரோனா வைரஸ்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.