ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுதலை

ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மொஹமட் சியாப்தீன் இஸ்மத் எனும் நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த நபரை 5 இலட்சம் ரூபா சரீர பிணையின் அடிப்படையில் விடுதலை செய்ய பிரதான நீதவான் புத்திக சீ ராகல உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2016 ஆம் ஆண்டு சேவையாற்றிய யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்பட்டும் சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.