கொரோனா காலத்தில் சாதனை படைத்த இலங்கை சிறுவன்! குவியும் பாராட்டுகள்
கொரோனா ஊரடங்கு காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இலங்கை சிறுவன் சோலார் வாகனம் ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளான்.
உலோக துண்டுகளை பயன்படுத்தி சோலாரில் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனத்தை கண்டறிந்துள்ளான் 15 வயதேயான Suntharalingam Piranawan.
இதுகுறித்து கூறுகையில், இந்த வாகனத்தை உருவாக்க 8 மாதங்கள் எடுத்துக் கொண்டேன்.
என்னை போன்று பலரும் இருக்கின்றனர், கொரோனா காலத்தில் இதுபோன்ற கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும் போது மன உளைச்சலில் இருந்து மீளலாம்.
இதை கண்டுபிடிக்க என்னுடைய தாத்தா என்னை மிகவும் ஊக்கப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சோலார் காரை உருவாக்குவதே தன்னுடைய லட்சியம் என்றும், என்னைப் போன்றவர்களுக்கு அரசாங்கம் உதவி புரிந்தால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக சோலார் சைக்கிள் உட்பட பலவற்றை Suntharalingam Piranawan கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.