நேற்று 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

நேற்று 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்றைய தினம் 309,559 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

இதன்படி, நேற்றைய தினம் 65,695 பேர் சைனோபாம் தடுப்பூசியை முதலாவது தடவையாக பெற்றுள்ளனர்.

217,712 பேருக்கு இரண்டாவது தடவையாக சைனோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்றைய தினம் 439 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி முதலாவது தடவையாக செலுத்தப்பட்டதோடு, 17,219 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 93 லட்சத்து 79 ஆயிரத்து 926 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 36 இலட்சத்து 14 ஆயிரத்து 645 பேர் இரண்டாவது தடவையாகவும் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தரவுகளின் அடிப்படையில் இதுவரையில் ஒரு கோடியே 18 லட்சத்து 50 ஆயிரத்து 308 பேர் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

அவர்களில் 45 லட்சத்து 27 ஆயிரத்து 502 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.