சமையல் காரராக மாறிய பூனை.. வித விதமாக சமைத்து அசத்தும் அரிய காட்சி! மிரண்டு போன பார்வையாளர்கள்

சமையல் காரராக மாறிய பூனை.. வித விதமாக சமைத்து அசத்தும் அரிய காட்சி! மிரண்டு போன பார்வையாளர்கள்

சமீப காலமாக பல்வேறு குறும்புத்தனமாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக விலங்குகளின் அபிமான வீடியோக்கள் இணையதளத்தில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.

பூனைகள், யானை, நாய் என செல்ல பிராணிகளின் குறும்புத்தனமான வீடியோக்கள் சில நொடிகளில் வைரலாகி வருகின்றன.

பூனை வீடியோக்களை ஆன்லைனில் மணிக்கணக்கில் பார்ப்பதில் வெறி கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவரா? இந்த செய்தி உங்களுக்குத்தான். 

ஒரு பூனை சமையல்காரராக மாறி பல்வேறு ரெசிபிக்களை தயாரிப்பதன் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த பூனை பானங்கள் உட்பட பல்வேறு சுவையான உணவுகளை தயார் செய்யும் வீடியோக்கள் பார்பவர்களை குதூகலப்படுத்துகிறது.

இன்ஸ்டாகிராமில் 'தட் லிட்டில் பஃப்' என்றயூசர், 'மியாவ் செஃப்' குறித்த வீடியோக்களை ஷேர் செய்துள்ளார்.

ஆகஸ்ட் 4 அன்று ஷேர் செய்யப்பட்ட ஒரு வீடியோவில், பூனை பல பானங்களை தயாரிப்பதை காணலாம். மிகவும் அழகாவும், பொறுமையாகவும் அந்த பூனை ஜூஸ்களை தயார் செய்கிறது . 

இந்த பூனையின் திறமையை கண்ட நெட்டிசன்கள் அதன் சமையல் திறன்களால் ஈர்க்கப்படுவது மட்டுமல்லாமல், அந்த பூனையின் அழகைக் கண்டு பிரமிக்கிறார்கள்.