சுகாதார வழிகாட்டல்கள் சட்டமாக்கப்படவுள்ளன - இரு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் கொவிட்19 நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்கான பயிற்சிகளை வைத்தியர்கள் தற்போது நிறைவு செய்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.