சமூகத்தில் வைரஸ் பரவாமல் தடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

சமூகத்தில் வைரஸ் பரவாமல் தடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

கந்தகாடு புனர்வாழ்வு முகாம்களில் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருக்கலாம்.

ஆனால் சமூகத்தில் வைரஸ் பரவாமல் தடுக்க அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக தாகசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் 339 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கருத்து தெரிவிக்கையில் வைரஸ் பரவலை தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் மகத்தானவையாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டார்கள் நோயாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டவர்களாவர். இதில் அதிகளவிலானோர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
அடையாளம் காணப்பட்ட இரண்டாயிரத்து 454 நோயாளர்களில் ஆயிரத்து தொள்ளாயிரத்து 80 பேர் இதுவரை குணமடைந்துள்ளார்கள்.