புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள் வேலைநிறுத்தத்தில்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள் நேற்று (12) நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
கொவிட் தொற்றுக்கு மத்தியில் புகையிரத அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக செயல்பட தேவையான வசதிகள் செய்யப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று (13) நள்ளிரவு வரை அடையாள வேலைநிறுத்தம் தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.