சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 7 மீனவர்களின் PCR பரிசோதனை அறிக்கை வெளியானது

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 7 மீனவர்களின் PCR பரிசோதனை அறிக்கை வெளியானது

மன்னார் வங்காலை கிராமத்தில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 7 மீனவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகவில்லை என அந்த மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரீ.வினோதன் தெரிவித்தார்.

குறித்த மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுப்பட்டிருந்த போது இந்திய மீனவர் ஒருவரின் படகு பழுதடைந்துள்ள நிலையில் அவருக்கு உதவி வழங்கியுள்ளனர்.

இதற்கமைய, அவர்கள் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரீ.வினோதன் எமது செய்திப் பிரிவுக்கு குறிப்பிட்டார்.

இதேவேளை, வெளிநாட்டில் பணிப் பெண்களாக கடமையாற்றி கடந்த 27 ஆம் திகதி நாட்டிற்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட 71 பேரும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இயக்கச்சி 55 வது படைப்பிரிவில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நிலையிலேயே அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.