வீட்டில் வளர்த்த செடியில் காய்த்த 2 கிலோ எடை கொண்ட எலுமிச்சை பழம்

வீட்டில் வளர்த்த செடியில் காய்த்த 2 கிலோ எடை கொண்ட எலுமிச்சை பழம்

பொதுவாக 2 கிலோவுக்கு எலுமிச்சை பழம் வாங்கினால் 40 பழங்கள் கிடைக்கும். ஆனால் ஒரே எலுமிச்சை பழம் 2 கிலோ எடைக்கு இருப்பதை பார்த்து பொதுமக்கள், வியப்பில் ஆழ்ந்தனர்.

பொதுவாக எலுமிச்சை பழம் சிறிய உருண்டை வடிவில் தான் வளரும். ஆனால் கர்நாடகத்தில் ஆச்சரியப்படும் அளவுக்கு 2 கிலோ எடை அளவில் எலுமிச்சை பழம் காய்த்துள்ளது.

அதுபற்றி விரிவாக காண்போம்...

இந்த அரிய எலுமிச்சை பழம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா சரகூரு அருகே பீடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர், சனோஜ் என்பவரின் வீட்டில் காய்த்துள்ளது. இவர் அந்தப் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு எலுமிச்சை செடியை வளர்த்து வருகிறார்.

அதில் தான் ராட்சத எலுமிச்சை பழம் காய்த்துள்ளது. அந்த செடியில் 3 எலுமிச்சை பழங்கள் தான் காய்த்துள்ளது. ஆனால் ஒன்றின் எடை 2 கிலோ 150 கிராம் அளவில் இருந்துள்ளது. மற்ற 2 எலுமிச்சை பழங்களும் தலா 2 கிலோ எடை கொண்டதாக உள்ளது.

இதை பார்த்து சனோஜ் மற்றும் குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். அத்துடன் இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்தப் பகுதி பொதுமக்கள் சனோஜ் வீட்டுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

பொதுவாக 2 கிலோவுக்கு எலுமிச்சை பழம் வாங்கினால் 40 பழங்கள் கிடைக்கும். ஆனால் ஒரே எலுமிச்சை பழம் 2 கிலோ எடைக்கு இருப்பதை பார்த்து பொதுமக்கள், வியப்பில் ஆழ்ந்தனர்.

சிலர் அந்த எலுமிச்சை பழத்தை தங்களது செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். அது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சனோஜ் கூறுகையில், எங்கள் வீட்டில் எலுமிச்சை செடி வளர்த்து வருகிறோம். இது பாரசீக இன எலுமிச்சை. அதில் எலுமிச்சை பழம் முதலில் சிறியதாக இருந்தது. நாளாக ஆக அது பெரிய எலுமிச்சை பழமாக உருமாறியது.

தற்போது ஒரு எலுமிச்சை பழத்தை பறித்துவிட்டேன். இன்னும் 2 எலுமிச்சை பழங்கள் செடியில் உள்ளது. அது இன்னும் கொஞ்சம் வளர வேண்டியதுள்ளது என்றார்.