தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனை தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் நிலையில் தங்களுக்கு அவசியமான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில் தங்களுக்கு போதுமான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தொடருந்து திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.