ஜனாதிபதியிடம் இருந்து ஓர் முக்கிய அறிவிப்பு
தேயிலைத் துறையினை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தேயிலை கொழுந்துக்கு நியாயமான விலையை பெற்றுத்தர உதவுமாறு ஜனாதிபதியிடம் அந்த பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
இந்தநிலையில் சுதேச விவசாயிகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதில் தேயிலைத்துறையினை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.