டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020: தங்க பதக்க பட்டியல் வரிசையில் அமெரிக்கா முதலிடத்துக்கு முன்னேற்றம்!
'டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020' போட்டிகள் இன்று நிறைவடையும் நிலையில், இது வரை இடம்பெற்ற போட்டிகளின் பெறுபேறுகளுக்கு அமைய தங்க பதக்க பட்டியல், வரிசையில் அமெரிக்கா சீனாவைவிட முன்னேறி முதலாவது இடத்தினை பிடித்துள்ளது.
அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்று மொத்தமாக 113 பதக்கங்களை பெற்றுள்ளது.
சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்று மொத்தமாக 88 பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
'டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020' போட்டிகளை நடத்தும் ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்று மொத்தமாக 58 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் 22 தங்கம் உட்பட மொத்தமாக 65 பதக்கங்களை பெற்று பெரிய பிரித்தானியா நான்காவது இடத்திலும் 20 தங்கம் உட்பட மொத்தமாக 70 பதக்கங்களை பெற்று ரஷ்ய ஒலிம்பிக் குழு ஐந்தாவது இடத்திலும் உள்ளது.