ஸ்ரீலங்காவில் நீருக்கடியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது ஆச்சரியம்
ஸ்ரீலங்காவில் நீருக்கடியில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது அருங்காட்சியகம் நேற்று (10), திருகோணமலையில் உள்ள சாண்டி பே கடற்கரையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா திறந்து வைத்தார்.
ஸ்ரீலங்காவில் நீருக்கடியில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது அருங்காட்சியகம் காலியில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது நீருக்கடியில் அருங்காட்சியகம் கடற்படைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் சாண்டி பே கடற்கரையில் கட்டப்பட்டது.
ஸ்ரீலங்கா கடற்படையின் மனித சக்தியைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக இந்த அருங்காட்சியகம் சாண்டி பே கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளும் கடற்படை வீரர்களின் கையால் செய்யப்பட்டன.
நீருக்கடியில் 150 அடி நீளம் மற்றும் 85 அடி அகலத்திற்குள் சுமார் 60 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது,
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பவளங்களின் மீளுருவாக்கம் மற்றும் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதாகும்.
மேலும், இந்த இயற்கையின் மற்றொரு நீருக்கடியில் அருங்காட்சியகம் எதிர்காலத்தில் தங்காலை பகுதியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
நீருக்கடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டம் ஸ்ரீலங்காவில் மனித சக்தியால் உருவாக்கப்பட்ட ஆச்சரியம் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.