கொழும்பு - ஐந்து லாம்பு சந்தியிலுள்ள 4 மாடிக்கட்டடத்தில் தீப்பரவல்!

கொழும்பு - ஐந்து லாம்பு சந்தியிலுள்ள 4 மாடிக்கட்டடத்தில் தீப்பரவல்!

கொழும்பு,  ஐந்து லாம்பு சந்தி, புதிய சோனக தெரு பகுதியிலுள்ள 4 மாடிக்கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக், அலுமினியம் மற்றும் கண்ணாடிப் பொருட்களை களஞ்சியப்படுத்தும் பகுதியில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவம் இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.