பிரித்தானியாவிலிருந்து 234 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பயண கட்டுப்பாடுகள் காரணமாக பிரித்தானியாவில் சிக்கி தவித்த 234 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) நாடு திரும்பினர்.
லண்டனில் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.504 என்ற விசேட விமானம் மூலம் இன்று காலை 8.45 மணிக்கு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.