போதை மாத்திரைகளுடன் வியாபாரி கைது

போதை மாத்திரைகளுடன் வியாபாரி கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைசேனை, புகையிரத வீதியில் வைத்து போதை மாத்திரை வியாபாரி ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த வியாபாரியிரிடம் இருந்து 48 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் அவரது வீட்டில் வைத்து போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.