இரத்தினபுரி ஆயுர்வேத வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்!

இரத்தினபுரி ஆயுர்வேத வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்!

இரத்தினபுரி புதிய நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியசாலை, கொரோனா சிகிச்சை மையமாக இயங்கவுள்ளது.

சப்ரகமுவ மாகாண அளுநர் காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது.

தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் அதிகரித்தமை காரணமாக, ஆயுர்வேத வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்கு இவ்வாறு சிகிச்சையளிக்கப்படவுள்ளதாக அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

இதனூடாக 80 நோயார்களுக்கு சிகிச்சை வழங்க முடியும் என சப்ரகமுவ மாகாண காரியாலயம் தெரிவித்துள்ளது.