பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 85 பேருக்கு கொரோனா!

பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 85 பேருக்கு கொரோனா!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி களுத்துறை - பாயாகல - கொரகதெனிய பிரதேசத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பொது சுகாதார பரிசோதகர்களால் நிறுத்தப்பட்ட பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துக் கொண்ட 85 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த பூப்புனித நீராட்டு விழா கடந்த 24 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு உதவி புரிவதற்காக 35 பேர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொது சுகாதார பரிசோதகர்களினால் குறித்த நிகழ்வு நிறுத்தப்பட்டதால், வீட்டு உரிமையாளரினால் சமைக்கப்பட்ட உணவுகள் பார்சல் மூலம் நிகழ்வுக்காக அழைக்கப்பட்டிருந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்விற்காக சமைக்க வந்திருந்தவருக்கு கொவிட் தொற்றுறுதியான நிலையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 85 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் உள்ள 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.