பலாலி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர் சொந்த இடங்களுக்கு திரும்பினர்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக யாழ்ப்பாணம் பலாலி விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 100 பேர் குணமடைந்து இன்று (சனிக்கிழமை) அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட குறித்த 100 பேரும் 14 நாட்கள் நிறைவடைந்து இன்றைய தினம் சுய தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த இடங்களுக்கு விமானப்படையின் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் கொழும்பு, கண்டி மற்றும் அனுராதபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் சுய தனிமைப்படுத்தலை அடுத்து அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.