பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு – தமிழக அரசு

பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு – தமிழக அரசு

தமிழகத்தில் வெட்டுக்கிளிகளின் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை மையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து தமிழக அரசு பதிலளித்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தை சேர்த்த ஜீவகுமார் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மேற்படி மனுவினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது விவசாய உற்பத்தி துறை ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் வெட்டுக்கிளிகள் பரவலை தடுக்க புழு நிலையிலேயே அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி, குமரி மாவட்டங்களில் பயிர்களை நாசம் செய்தது பாலைவன வெட்டுக் கிளிகள் அல்ல எனவும் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு வெட்டுக்கிளிகள் தொடர்பான கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.