இயக்கச்சி படைமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 71 பெண்கள் வீடுகளுக்கு திரும்பினர்
இயக்கச்சி படைமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 71 பெண்கள், அவர்களின் வீடுகளுக்கு இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டனர்.
லெபனானிற்கு பணிப் பெண்களாக சென்றிருந்த இவர்கள், நாட்டிற்கு அண்மையில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள், இயக்கச்சி 55 ஆவது படைப்பிரிவிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதற்கான சான்றிதழை யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரிய, அவர்களுக்கு வழங்கி, வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.