05 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு நேர்ந்த கதி...!
05 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துரை-மொரன்துட்டுவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சிறுமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டில் நிகழ்வு ஒன்று ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பிறந்தநாள் நிகழ்விற்கு வந்த நபர் ஒருவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் சிறுமியின் தந்தை மற்றும் மாமன்மார் சந்தேக நபரை தடி ஒன்றினால் தாக்கி கொலை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 45 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர்களை காவல் துறையினர் கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.